பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவிலில்
8 கோடியே 54 லட்சம் மதிப்பில் 15 அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட தங்கத்தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நாளை தமிழகம் முழுவதும் 101 திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாகவும் சொல்வதை செய்யும் செய்வதை சொல்லும் அரசாக இந்த அரசு செயல்படுவதாகவும்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற
ஸ்ரீ பவானி அம்மன் கோவிலில் சுமார் 8 கோடியே 54 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக 15 அடி உயரம்ஐந்து அகலம் கொண்ட தங்கத்தேரானது செய்யப்பட்டு அதற்கான வெள்ளோட்டமானது இன்று விடப்பட்டது இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு
கைத்தறி மற்றும் கதர் நூல் துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன் துரை சந்திரசேகர் மற்றும்
இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு
தேர் வெள்ளோட்ட நிகழ்வை தொடங்கி வைத்தனர்.