திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஊத்துக்கோட்டையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை இயக்கத்தின் சார்பில் பல ஆண்டுகாலமாக வீட்டுமனை பட்டா வேண்டி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அரசு அதிகாரிகளுக்கு நினைவூட்டும் விதமாக கொடுக்கப்பட்ட மனுக்களின் நகல்களை மூட்டையாக தலையின் மீது சுமந்து வட்டாச்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக கோஷங்களை எழுப்பியவாறு சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட்டாட்சியர் இல்லாததால் துணை வட்டாட்சியர் நேரில் சந்தித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் அதன் பின்னர் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதன் பிறகு துணை வட்டாட்சியரிடம் ஆறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கை மனுவை வழங்கப்பட்டது.
போராட்டம் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் கே எம் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.