தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொழில்பேட்டையில் பாப்பான் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஏ ஆர் எஸ் இரும்பு உருக்கும் தனியார் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான கருத்து. கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மாசு கட்டுப்பாட்டு
அலுவலர் லிவிங்ஸ்டன் வட்டாட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இரும்பு உருக்கும் ஆலை
எஸ் ஆர் கண்டிகை ஊராட்சியில் தற்போது இரண்டு லட்சம் மெட்ரிக் டன் இரும்பு கம்பிகளை ஆண்டுக்கு உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை தற்போது 8 லட்சமாக உற்பத்தியை அதிகரிக்க விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுவதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது ஏற்கனவே அப்பகுதியில் விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் பெயரளவிற்கு ஊராட்சி மக்களை அழைக்காமல் சிலரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தியதாகவும் ஏற்கனவே இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம்பாதிக்கும் நிலையில் தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதிக்க கூடாது எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்