மாதவரம் ரவுண்டானா அருகில் ஜி. என். டி. , சாலையில் ரேடியல் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர், பாக்கீர், 72. இவர், மண்ணடியில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவருக்கு மகள், மகன் என, இரு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7: 30 மணியளவில் பாக்கீர், குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். மாதவரம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பாக்கீர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.