திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி. ஜெ. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு தினவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக ராணுவ மிடுக்குடன் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்ளை வரவேற்றனர். விழாவிற்கு கல்விக்குழுமங்களின் நிர்வாக இயக்குனர் டி. ஜெ. ஆறுமுகம் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் லட்சுமிபதி அனைவரையும் வரவேற்றார். இதையடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். விழாவின் சிறப்பம்சமாக நடைபெற்ற மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, மைம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதை தொடர்ந்து விழாவிற்கு தலைமை தாங்கிய டிஜெஎஸ் கல்விக்குழுமங்களின் தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி. ஜெ. கோவிந்தராஜன் மாணவர்களிடையே பேசுகையில் ஐந்தறிவு கொண்ட மிருகங்ளால் பேச முடியாது, சிந்திக்கவும் தெரியாது ஆறரிவுள்ள மனிதர்களால் மட்டுமே சிந்தித்து செயல்பட முடியும், அதனை சரியாக பயன்படுத்திசாதனையாராக மாறுங்கள். மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்