கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன‌ ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்களை மிரட்டும் தோனியில் அநாகரிகமாக பேசினார். தாராட்சி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாராட்சி கிராமத்தில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணி அளவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி