கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டிய கன்னியம்மன் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் உடல் சிதைந்தவாறு அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொருக்குப்பேட்டை இரவில் போலீசார் விபத்துக்குள்ளானவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கவனக்குறைவால் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற காரணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.