ஓட்டை உடைசல் நிழற்கூரைகளை மாற்றியமைக்க கோரிக்கை

68பார்த்தது
ஓட்டை உடைசல் நிழற்கூரைகளை மாற்றியமைக்க கோரிக்கை
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில், பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக ஆவடி ரயில் நிலையம் உள்ளது. இங்கு, நான்கு நடைமேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக தினமும் 285 மின்சார ரயில்கள் மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, தினமும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

அதேநேரம், ஆவடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பல நிழற்கூரைகள் ஆங்காங்கே ஓட்டைகளுடன் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக, விரைவு ரயில்கள் வந்து செல்லும் 4வது நடைமேடையில் உள்ள நிழற்கூரை படுமோசமாக உள்ளது.

எனவே பயணியர் நலனை கருத்தில் வைத்து, மழைக்காலம் துவங்கும் முன், ஓட்டை உடைசல் நிழற்கூரைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி