ஆவடி அடுத்த மோரை, புதிய கன்னியம்மன் நகரில், மரக்கடை கிடங்கு உள்ளது. இங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் கிஷன், 35, என்பவர், 'லோடுமேனாக' பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், லாரியில் வந்த மரக்கட்டைகளை இறக்கும் பணியில், நரேஷ் கிஷன் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, 200 கிலோ எடை கொண்ட மரக்கட்டை ஒன்று, தவறி அவர் மீது விழுந்துள்ளது. இதில், நரேஷ் கிஷனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.