திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோ ஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று இரவு தெரிவித்துள்ளனர். மேலும் இது வரலாறு காணாத வெற்றி என்றும் கருத்து தெரிவித்தனர்.