திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை புனித பேதுரு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம் பலஸ்தினாபுரத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் இன்று(செப்.29) பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.