ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கைலாக் (Kylaq) என்ற ஒரு புதிய எஸ்யூவி ரக காரினை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட 10 நாட்களிலேயே 10000 புக்கிங் பெற்றுள்ளது. கார்களுக்கான முன்பதிவு டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. இந்த கார்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச விலை ரூ. 7.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.