நெல்லை மாவட்டம் ராதாபுரம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ராதாபுரம் கால்வாயில் இருந்து கடைமடை குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், ராதாபுரம் அண்ணாவிமடம் சாலையை சீரமைக்க வேண்டும், ராதாபுரம் பெருமாள் கோவில் தெரு, சந்தை தெரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வண்ண கற்கள் சாலை அமைக்கப்பட வேண்டும், மறவன்பத்துகுளம், பண்டாரபெருங்குளம் நெடுவாழிகுளம், பட்டார்குளம் ஆகிய குளங்களுக்கு செல்லக்கூடிய நீர்வழி பாதைகளை சீரமைக்க வேண்டும், ராதாபுரம் யூனியன் அலுவலகத்திற்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்,
ராதாபுரம் காவல் நிலையம் முன்பு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பொதுநல மக்கள் இயக்க செயலாளர் காமராஜ், நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை செயலாளர் சகாய இனிதா, வாசகர் வட்ட தலைவர் மணி, பண்டாரபெருங்குளம் விவசாயி பாலா, ஊரல்வாய்மொழி விவசாயிகள் ரஜினி , மனோகர் , சமூக ஆர்வலர் குணசீலன், ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்