திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூர் புனித குழந்தை இயேசு ஆலயத்தில் அசன பண்டிகை இன்று(அக்.01) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு பங்கேற்றார். அவருக்கு ஆலய பங்கு தந்தை மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.