நெல்லை மாநகராட்சி உடன் ரெட்டியார்பட்டி இட்டேரி உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளை இணைக்க உள்ளாட்சி துறை முடிவெடுத்துள்ளது. ஆனால் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமையன்பட்டி கிராம மக்கள் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது கவுன்சிலர் மாரியப்பன் என்பவர் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.