நெல்லை களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பக பகுதியில் உள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 7ம் தேதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமலை நம்பி கோவில் செல்லும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.