நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை; "முதல்வரின் முகவரி' என்ற திட்டம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட இதர கோரிக்கைமனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டு வருகின்றது. இதை பாராட்டி நெல்லை மாநகராட்சிக்கு கோப்பையும் நற்சான்றிதழும் மாவட்ட நிர்வாகம் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திராவிடம் வழங்கினார்.