தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வயல்களில் தண்ணீர் நிரப்பி டிராக்டர் மூலம் மூலம் உழவு செய்வது, நாற்றங்கால் தயாரிப்பது, பாய் நாற்றங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் காட்டுப்பன்றிகள், நாற்றாங்கால் தயாரிக்கும் வயல்களில் சென்று நாற்றங்காலை சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவலுக்கு இருந்து வருகின்றனர்.