நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவரும் நெல்லை மாநகராட்சியின் மாவட்ட உறுப்பினருமான ரசூல் மைதீன் இன்று (பிப்ரவரி 21) பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் சிறையில் உள்ள இஸ்லாமியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். குறிப்பாக நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.