நெல்லை அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 26 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாளை (அக்.,25) மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.