பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சொமேட்டோவில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவில் ஒவ்வொரு ஆர்டருக்கும் விதிக்கப்படும் பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.7ஆக இருந்த கட்டணத்தை தற்போது ரூ.10 வரை உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.