2026 சட்டசபை தேர்தல் திமுக நினைப்பது போல் சுலபமாக இருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர், "திருமாவளவன் நாம் முதலமைச்சர் ஆகும் அளவிற்கு நமது செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே 2026ல் எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து" என்று பேட்டியளித்துள்ளார்.