தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லைக்கு வருவதையொட்டி, முன்களப் பணிக்காக, திருநெல்வேலிக்கு இன்று தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு வந்தார். கங்கைகொண்டான் எல்லையில் அவரை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாம் வரவேற்றார். கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் அமையப் பெற்றுள்ள டாடா சோலார் நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.