நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு ஜாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் நேற்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் தரப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர் இந்நிலையில் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் வீட்டை சேர்ந்த 12 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.