நெல்லை மாவட்டம் மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முன்னிலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் கிடப்பில் கிடக்கும் அரசு திட்டங்களை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.