நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஜேசிபி ஓட்டுனர் தமிழ்செல்வனை நேற்று 4 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த வெட்டுக்காயத்தோடு தமிழ்செல்வன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் முருகன் இசக்கி முருகபெருமாள் பணகுடியை சேர்ந்த கிரியோன் ஆகிய 4 பேர் தான் தமிழ்செல்வனை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது எனவே போலீசார் இன்று 4 பேரையும் கைது செய்தனர்.