அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ

370பார்த்தது
அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 49வது வார்டு ஆண்டவர் 2வது மற்றும் 3வதுதெரு பின்புறம் பல மாதமாக கழிவுநீர் ஓடை தூர்வாராமல் கழிவுநீர் தேங்கி வீடுகளில் உள்ள கழிவுநீர் பைப் வழியாக வீட்டின் உள்புறம் ஏறுகின்றது. அதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே போர் கால அடிப்படையில் தூர்வாரி சுத்தம் செய்யும் மாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார் SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் M. மின்னத்துல்லாஹ். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி