சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (05-09-2024) நெல்லையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த வகையில் தமிழ்நாடு சைவ வேளாளர் சாந்தி நகர் கிளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சாந்தி நகர் கிளைச்சங்கம் தலைவர் கோமதிநாயகம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் நாராயணன், மாநில துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் வீரவநல்லூர் மாரியப்பன் பிள்ளை செயற்குழு உறுப்பினர்கள் சரவணவேல், பார்த்தசாரதி, சொக்கலிங்கம், பழனி சிவகணேஷ், இசக்கியப்பன், சங்கரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.