திருநெல்வேலி மாநகர பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரி மற்றும் ராணி அண்ணா கல்லூரி அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மதன் பிரகாஷ் என்பவர் மீது மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மதன் வீடியோ மூலம் காவல்துறையினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.