2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இந்த ஆண்டில் கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்வது என சிறப்பு ஆலோசனை நடத்தினர்.