காதலர் தினத்தன்று டெல்லி மெட்ரோ நிலையத்தில், தனது காதலனை மற்றொரு பெண்ணுடன் பார்த்த காதலி, அவரை கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், சிவப்பு உடையில் இருக்கும் பெண் ஒருவர் தனது காதலனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்து அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டதால் மேலும் கோபமடைந்த பெண், என்னை தொட உனக்கு யார் உரிமை கொடுத்தது? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.