தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (மார்ச்.07) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 -3° C இயல்பை விட அதிகமாகவும், வடதமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 - 4° C அதிகமாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36-37° C-ஐ ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வெயில் கொளுத்தும்.