சென்னையில் நடந்த சினிமா பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே. ராஜன, நடிகர் சிவாஜி கணேசன் வீடு விவகாரம் குறித்து பேசினார். அப்போது, “திருக்குறள் எப்படி தமிழை உலகளவில் கொண்டுசேர்த்ததோ அதேபோல், நடிப்பின் மூலம் தமிழை உலகளவில் கொண்டு சேர்த்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரது வீடு ஜப்தி செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. அப்போது, நடிகர் பிரபு என்னை அழைத்து, தான் கண்ணீர் விட்டதாக சொன்னார். அதேபோல், அந்த வீடு தனது பேரில் இருப்பதால், ஜப்தி செய்ய வாய்ப்பில்லை என சொன்னார்” என கே. ராஜன கூறினார்.