நெல்லை மாநகர மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதியான கருப்பன்துறை அருகில் 20 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்காமல் கற்களை அமைத்துள்ளனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நெடுஞ்சாலை துறையை கேள்வி கேட்டு நேற்று (டிசம்பர் 29) இரவு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.