பிரிட்டானியா நியூட்ரிஷன் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாஞ்சான்குளம் கிராமத்தில் இன்று (மார்ச் 13) பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், பிரிட்டானியா நியூட்ரிஷன் பவுண்டேஷன் திட்ட அலுவலர் ஆனந்தராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.