குஜராத் மாநிலம் பனஸ்கந்தா பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை, சுமார் 16 மாதங்களாக 7 ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஹோட்டல் ஒன்றில், மாணவி உடை மாற்றுவதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை அப்பெண்ணிடம் காட்டி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பலமுறை அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.