வட இந்தியர்கள் குறித்து அமைச்சர் துரைமுருகனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய துரைமுருகன், "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால், வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியை திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.