தலைமை தபால் நிலையத்தில் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

53பார்த்தது
தலைமை தபால் நிலையத்தில் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை, பாளை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளர்கள் தபால் பணி குறித்த குறைகளை தெரிவிப்பதற்காக வரும் 13ஆம் தேதி பகல் 11 மணிக்கு பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை 11ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று (செப்.5) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி