தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்க வைர விழா மற்றும் நெல்லை மாவட்ட பேரவை கூட்டம் நெல்லை வருவாய் துறை அலுவலர் சங்க கூட்டரங்கில் நேற்று (அக்.,19) நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மாரி வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை கோட்ட செயலாளர் ஜெயா முன்னிலை வகித்தார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.