திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை இரண்டு மாடுகள் மேலப்பாளையம் பஜாரில் உள்ள ஒரு கடை முன்பு சண்டையிட்டு துவம்சம் செய்துள்ளன. இதன் காரணமாக வியாபாரி பெரிதும் வேதனை அடைந்துள்ளார். இவ்வாறு அட்டகாசம் செய்யும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.