முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 8) மேலப்பாளையத்தில் திமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.