நீண்ட நேரம் பல் துலக்குவது பற்களையும், ஈறுகளையும் பலவீனமடையச் செய்யும். பற்கள் சீக்கிரம் கொட்டிவிடும். முறையான பற்கள் பராமரிப்புக்கு 2 நிமிடங்கள் மட்டுமே பல் துலக்க வேண்டும். பல் துலக்கும் பிரஷ்கள் கரடுமுரடாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டாணி அளவு மட்டுமே பற்பசையை எடுக்க வேண்டும். மேற்பகுதி, கீழ்பகுதி, வலப்பக்கம், இடப்பக்கம் என அனைத்துப் பகுதிகளையும் வட்டமான முறையில் தேய்க்க வேண்டும்.