நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாப்பாக்குடி வழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் இடைக்கால் நோக்கி சென்றபோது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே முத்துசாமி பரிதாபமாக பலியானார்.