விஜய்சேதுபதி நடிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மகாராஜா.100 கோடி ரூபாய் வரை வசூலித்து, பாக்ஸ் ஆபிசிலும் சாதனை படைத்த இந்த படம் சீனாவில் கடந்த 29ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அங்கு முதல் நாளில் மட்டும் ரூ.10 கோடி வரை வசூலானது. இந்த நிலையில், சீனாவை தொடர்ந்து தற்போது ஜப்பானில் மகாராஜா படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கு சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.