ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையைக் கடந்துள்ள போதிலும், கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.