நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மாசாணம். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மாசாணம் ஜெகதீசை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாசாணத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் மாசானத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்