நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவர் நேற்று சேரன் மகாதேவிலியிருந்து நெல்லை நோக்கி பேருந்தில் பயணித்தார். அப்பொழுது கழுத்தில் இருந்த நான்கு பவுன் நகையை காணாது அதிர்ச்சி அடைந்த அவர் சேரன்மாதேவி காவல்நிலைத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் தீவிர விசாரணையில் பெண்ணிடம் நகை பறித்த மதுரையைச் சேர்ந்த செல்வி மற்றும் அன்னபூரணியை கைது செய்தனர்.