செயினை பறிக்க முயற்சித்த திருடனுக்கு தர்ம அடி (வீடியோ)

74பார்த்தது
திருவனந்தபுரம் அருகே மெடிக்கலில் மருந்து வாங்கி திரும்பிய பெண்ணிடம் செயினை பறிக்க நடந்த முயற்சி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஸ்கூட்டரில் வந்து, அஸ்வதி என்ற பெண்ணின் தாலி செயினை பறிக்க திருடன் முயற்சித்துள்ளான். சுதாரித்த அஸ்வதி, திருடனின் சட்டையை பிடித்ததால் இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். அஸ்வதிக்கு தலை, முகம் மற்றும் உடலில் காயம், திருடன் அனில் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தாலி செயினை பறிக்க முயன்ற திருடனை பெண் மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி