வெடித்துச் சிதறிய அரசு டிவி! பற்றி எரிந்த வீடு!

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மரவமங்களம் கிராமத்தில் டிவி வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராமன் என்பவர் தனது வீட்டில் அரசு வழங்கிய டிவியை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென டிவி வெடித்துச் சிதறியதில் அவரது ஓட்டு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் முதலியவை தீயில் எரிந்து நாசமாகியது.

நன்றி: பாலிமர் நியூஸ்.