இந்த ஆண்டே வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'

55பார்த்தது
இந்த ஆண்டே வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக இயக்கி வரும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை இந்த ஆண்டு கடைசியில் வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி